வரும் 25-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; ஜூன் 02-ஆம் தேதி மீண்டும் திறப்பு..!
Summer vacation for schools from the 25th reopening on June 02
2025-2026-ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களுக்கு 25-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 02-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 06 முதல் 09-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு நாளையோடு முடிவடைகிறது.

இந்நிலையில், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-ந்தேதி என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜூன் 02-ந்தேதி பள்ளிகள் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Summer vacation for schools from the 25th reopening on June 02