4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சம்மன்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து, சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தாம்பரம் போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு எடுத்தது  இந்த நிலையில், நன்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு இன்று காலை  மணிக்கு ஆஜராகும் படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summon send to two peoples for 4 crores seized case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->