வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவுக்கு சன் டிவி ரூ.5 கோடி நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சன் டிவி நெட்வொர்க் ரூ.5 கோடி நிதி வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.

இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. 

இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சன் நெட்வொர்க் சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 10 மின்கல ஊர்திகள், 2 ஏசி சஃபாரி வாகனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த நிதியானது பயன்படுத்த உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sun TV donates Rs 5 crore to Vandalur zoological Anna Park


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->