தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி : டாஸ்மாக் கடைகளும் மூடல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (23-1-2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என்று உறுதியாகிறது.

மேலும், இந்த முழுஊரடங்கில் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி , சென்னை சென்ட்ரல் , எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் , செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் . மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SUNDAY LOCKDOWN TASMAC SHOP Closed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->