அதிர்ச்சியில் திரையுலகம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கூலி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலால், ரஜினி ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமாகி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

super star rajinikant admitted hospital


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->