#Breaking :: ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர்! சென்னை மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்வரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 செங்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நேற்று புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 967 கனஅடியில் இருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் 2,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

இதன் காரணமாக இன்று பிற்பகல் 3 மணி முதல் புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surplus water released from Chennai lakes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->