மக்களே உஷார்! செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் வெள்ள அபாயம்!
surplus water released from sembarambakkam Lake
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியது. இந்நிலையில் இன்று முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மேற்பார்வையில் நீர் திறக்கப்பட்டது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், காவனூர், திருநீர்மலை, குன்றத்தூர் ஆகிய பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் நீர் வழித்தடங்கள் செல்லும் பாதைகளில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
surplus water released from sembarambakkam Lake