சத்துணவு மையங்களில் சர்க்கரை பொங்கல்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாட்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இனி வரும் காலங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது சத்துணவு மையங்களில் கருணாநிதி பிறந்தநாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sweet Pongal in sathunavu maiyam on karunanithi birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->