சர்வதேச யோகா தினம் : தமிழக ஆளுநர் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


சர்வதேச அளவில் யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21 ம் தேதி கொண்டாடப் படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வரும் இந்த சர்வதேச யோதா தினம் இன்று 10வது ஆண்டாக தொடர்ந்து கொண்டாடப் பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. அதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தார். மேலும் அந்த யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவியுடன் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனர். 

அந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி பேசியதாவது, " யோகா தான் ஒரு நாட்டின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அந்த வகையில் நமது பிரதமர் மோடி தான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் அனைத்திற்கும் யோகாவை அறிமுகப் படுத்தினார். 

இன்று பல நாடுகளும் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த யோகா தினத்தில் ஒரே நேரத்தில் 24 கோடி பேர் யோகா செய்து சாதனை படைத்துள்ளனர். யோகா மனதிற்கும் , உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. 

இதை மக்கள் அனைவரும் அவர்தம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T N Governor Participated in International Yoga Day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->