தாம்பரம் - கடற்கரை இடையே ரெயில் பாதையில் கோளாறு - பயணிகள் சிரமம்.! - Seithipunal
Seithipunal


தாம்பரத்திலுருந்து மெரினா கடற்கரைக்கு இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். 

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என்று லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் மூலம் சென்னை நகருக்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் ரெயில் பாதையில் உள்ள உயர்மின் அழுத்த கம்பியில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தாம்பரம் - மெரினா கடற்கரைக்கு இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நின்றது.

இதன் காரணமாக மின்சார ரெயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று அனைவரும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tambaram to beach electric train service affected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->