+2 Result :: தமிழுக்கே இந்த நிலையா.!! பாதாளத்தில் ஆங்கிலம்.. முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 94.56 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவற்றில் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும், மாணவிகள் 96.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மேலும் அரசு பள்ளிகள் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49%, தனியார் சுயநிதி பள்ளிகள் 98.70%, இருபாலர் பள்ளிகள் 94.78%, பெண்கள் பள்ளிகள் 96.39%, ஆண்கள் பள்ளிகள் 88.98% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 7,60,606 மாணவ மாணவிகளின் மாணவியர்கள் 4, 08,440 பேரும், மாணவர்கள் 3,52,165 பேரும் மூன்றாம் பாளையம் தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பாடங்கள் அடிப்படையில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சமாக 7 பேர் மட்டுமே 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். அடுத்தபடியாக தமிழில் 35 பேரும், தாவரவியலில் 90 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 210 பேரும், விலங்கியலில் 382 பேரும், வேதியலில் 471 பேரும் இயற்பியலில் 633 பேரும் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 26,352 ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil 35 English 7 student centum in HSC exam result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->