கடலூர் இளைஞரை கரம்பிடித்த சீனப்பெண்.. இந்து முறையில் திருமணம்.!
tamil boy married a chinese girl in a tamil wedding at cuddalore
கடலூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் சீனாவைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தமிழ் கலாச்சாரம் வரவுப்படி கடலூரில் வைத்து நடைபெற்றது. இதில் மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சங்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் பகுதியைச் சார்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனாவை சார்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் தமிழ் கலாச்சார முறையில் திருமணம் வெறும் விமரிசையாக நடைபெற்றது.
![](https://img.seithipunal.com/media/IMG-20230411-WA0086-kuecm.jpg)
இந்த திருமணத்தில் சீன மணப்பெண் யீஜியோ பட்டுப் புடவை தங்க அணிகலன்கள் என தமிழ் பெண்ணாகவே மாறி வர மணமகன் பாலச்சந்தர் பட்டு வேட்டி பட்டு சட்டையில் மந்திரங்கள் ஓத ஓமம் வளர்த்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்விற்கு சீனாவில் இருந்து மணப்பெண்ணின் உறவினர்களும் வருகை புரிந்து கலந்து கொண்டனர்.
திருமணம் குறித்து பத்திரிகையாளர்களுடன் பேசிய மணமகன் பாலச்சந்தர் சீனா மற்றும் பாங்காக் நாடுகளில் தொழில் செய்து வருவதாக தெரிவித்தார். அப்போது சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான யீஜியோ உடன் நட்பாக பழகி பின்னர் அது காதலாகி இன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்வில் இணைந்து இருக்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அவர்.
English Summary
tamil boy married a chinese girl in a tamil wedding at cuddalore