மாணவியிடம் அத்துமீறிய தமிழ் பேராசிரியர் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மாணவியிடம் அத்துமீறிய தமிழ் பேராசிரியர் - போலீசார் வலைவீச்சு.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் சாலையில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வந்தவர் பாலமுருகன். இவர் மாணவி ஒருவருக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஆன்லைன் மூலமாக கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அதில் பேராசிரியர் பாலமுருகன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நன்னடத்தை அலுவலர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil department HOD sexuall harassment to student in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->