தமிழக பட்ஜெட் 2023: "முதலமைச்சரின் காலை உணவு திட்டம்" விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


2023-24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குbசத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்காக ரூபாய் 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படுத்தப்படும என்றும், காலை உணவு திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Budget 2023 of Rs 500 Crore for expansion of Chief Minister Breakfast Scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->