பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி பயணம்! - Seithipunal
Seithipunal


பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நீலகிரி செல்கிறார்.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆ.இராசா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று நடைபெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்ளவுள்ளதால், முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை திறந்து வைத்தும், மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா அவர்கள், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம், (நீலகிரி வனக்கோட்டம்), வெங்டேஷ் பிரபு . (கூடலூர் வனக்கோட்டம்), மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் / கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சங்கீதா கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர்தயாளன், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சதீஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி இயக்குநர்கள் முகமது ரிஸ்வான் (பேரூராட்சிகள்), சரவணகுமார் (ஊராட்சிகள்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு (உதகை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், உதகை நகராட்சி துணைத்தலைவர் திரு.ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Chief Minister MK Stalin to visit Nilgiris on May 5 to launch various projects


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->