ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்!! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!
Tamil Nadu Draft Electoral Roll published
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "தமிழகத்தில் 6.11 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3 கோடி பேர் ஆண்களும், 3.11 கோடி பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,010 பேரும் உள்ளனர்.
18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 3.94 லட்சமாக உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதி 6.52 வாக்காளர்களுடன் தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி 1.69 லட்சம் வாக்காளர்கள் கொண்டு தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கு நேரடியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
வரும் நவம்பர் 9ஆம் தேதி வாக்குச்சாவடிகளில வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், 17 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியல் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும், அவர்களுக்கு 18 வயது பூர்த்தியானதும் அந்தக் காலாண்டில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியல் சேர்க்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Draft Electoral Roll published