அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை! வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி!
Tamil Nadu government has asked that no one should believe the rumors about the women rights amount
மகளிர் உரிமைத் தொகை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு பொறுப்பேற்ற பின் பெண்களுக்காக மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தின் படி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக விடுக்கப்பட்ட பெண்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு மீண்டும் தகுதியான பெண்களுக்கு வழங்கப்படும் என வதந்தி பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் மகளிர் உரிமை தொகை வராத பெண்களின் விண்ணப்பங்களை பெற்று மீண்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாகவும் போலியான தகவல் சமூக வலைதளையை பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த வதந்திய நம்பிய திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், பெருமாநல்லூர், கேவிஆர் நகர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் வரவை தந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பெண்களிடம் முகாம்கள் எதுவும் இன்று நடைபெறவில்லை. அது போலியான தகவல் என்று தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும் பெண்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வதந்தி அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Tamil Nadu government has asked that no one should believe the rumors about the women rights amount