#Breaking : மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நேரடி முறையில் நடத்த தமிழக அரசு பரிசீலனை! - Seithipunal
Seithipunal


கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது!

தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பெருந் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வானது நடைபெற்று வந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்லூரி தேர்வு ஆகியவை மாவட்டம் தோறும் அமைக்கப்பட்ட மையங்களில் நடைபெற்று வந்தன.

இந்த ஆண்டு நீட் தேர்வின் முடிவு வெளியான நிலையில் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். தமிழக அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரி, அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 8,000 மருத்துவ படிப்பிற்கான இடங்களை கலந்தாவின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு இந்த ஆண்டு 36,100 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் நேரடி முறையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தமிழக அரசு பரிசளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கலந்தாய்வு சென்னை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கில் நடத்தப்படலாம் என தெரிய வருகிறது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்னும் 5 நாட்களுக்குள் வெளியாகலாம் எனவும் அன்றைய தினமே மருத்துவ கலந்தாய்வுக்கான பட்டியலும் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government is considering to conduct medical consultation directly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->