திண்டுக்கல் குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு; தமிழக அரசு..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

"திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையில் இருந்து, வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 27.04.2025 முதல் 25.07.2025 வரை 90 நாட்களில் 45 நாட்களுக்கு (7 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறப்பும் 7 நாட்கள் தண்ணீர் நிறுத்தம்) வலது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் 54.43 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 209.95 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 4262.78 ஏக்கர் நிலங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் 4737.22 ஏக்கர் நிலங்கள், ஆக மொத்தம் 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government orders release of water from Dindigul Kudakanar dam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->