இனி ஆதார் எண் கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை!
Tamil Nadu Govt order for Aadhaar Number Mandatory Housing
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் அரசின் நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக அந்த பயனாளிகள் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளி ஒருவர் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை, இந்த திட்டத்தை செயல்படுத்தும் துறைகளே செய்து கொடுக்கலாம் என்றும் தமிழக அரசு பிறப்பித்துள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம் என்றும் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செப்டம்பர் 1970 இல் நிறுவப்பட்டது மற்றும் தமிழ்நாட்டில் உள்ள குடிசைக் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு வீட்டுவசதி, குடிசை மேம்பாடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வாரியம் ஆரம்பத்தில் அதன் செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியது மற்றும் அதன் செயல்பாடுகள் படிப்படியாக 1984 முதல் தமிழகத்தின் பிற நகர்ப்புறங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குறிக்கோள் “ஏழைகளின் புன்னகையில் நாம் காணும் கடவுள்” என்பதாகும். குடிசைப் பகுதிகள் இல்லாத நகரங்களை அடைவதற்காக, குடிசைப் பகுதிகளின் சுற்றுப்புறங்களை மேம்படுத்தவும், நகர்ப்புற குடிசைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இடத்திலேயே குடியிருக்கும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை வாரியம் செயல்படுத்தி வருகிறது.
English Summary
Tamil Nadu Govt order for Aadhaar Number Mandatory Housing