முதலிடம் பிடித்த தமிழ்நாடு.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஏடிஎம் இயந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும், எந்தநேரத்திலும் பணம் எடுத்துக்கொள்ள முடிகிறது. வங்கியில் சென்று பணம் எடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து வரிசையில் நின்று பணம் எடுப்பது தற்போது உள்ள காலகட்டத்தில் நேரத்தை வீணாக்கும் செயலாக கருதப்படுகிறது. ஆகையால், பெரும்பாலான மக்கள் ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் என்பது ஏடிஎம் இயந்திரம் ஆகும். பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். 

இந்நிலையில், டிசம்பர் 2021 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதால் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளது. மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் 23,460 ஏடிஎம்கள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil nadu has the highest number of ATMs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->