தமிழகத்தை பொறுத்த வரை பாஜக  வாஷ் அவுட் - துரை வைகோ!! - Seithipunal
Seithipunal


கொள்கை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கு எங்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம். அண்ணன் சீமானின் விட முயற்சிக்கு பாராட்டுக்கள் என  துறை வைகோ கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. மதிமுக கூட்டணிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தீப்பட்டி சின்னத்தில்  போட்டியிட்டு துரை வைகோ வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ பேசுகையில், தமிழகத்தை பொறுத்த வரை பாஜக  வாஷ் அவுட். 11 இடங்களில் பாஜக டெபாசிட்டை இழந்து உள்ளது.


உத்திரபிரதேசத்தில் அயோத்தி கோயில் வைத்து இந்த தேர்தலை சந்தித்தார்கள். அயோத்தி கோவில் அமைந்துள்ள இடத்திலேயே தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்கள். மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல உத்தர பிரதேசத்திலும் அவர்களுக்கு இடமில்லை என்று மக்கள் காண்பித்துள்ளனர்.

விக்கிரவாண்டி கிடைத்ததில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாம் தமிழர் கட்சி பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்று 8 சதவகித பாகை பெற்று இருக்கிறார்கள். கொள்கை தொடர்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கும் எங்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது அண்ணன் சீமானின் விடாமுயற்சி பாராட்ட வேண்டிய விஷயம் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu is concerned BJP is a wash out Durai Vaiko


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->