திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார் - பாஜக மூத்த தலைவர் தமிழிசை பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, பிறப்பால் ஒரு முதலமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்கத்தை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும். 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை சாடும் வகையில் பேசியுள்ளார். இவருடைய இந்த கருது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேச்சை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருமாவளவனை விமர்சித்து தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனிவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார். 

இன்றைய அரசியல் நாடகத்தில் திருமாவளவனின் இரட்டை வேடம். ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்! இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு... ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு ஆதரவாக... நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்.. என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா????" என்றது தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai soundarrajan speech about thirumavalan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->