மக்களே உஷார் : மழை பெய்ய போகுது குடை இல்லாம வெளிய போவாதீங்க!!
tamilnadu 12 district rain alert
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாகவே முன்பு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. கன்னியாகுமாரியில் பெய்த கனமழையால் தாய்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
ஆனால், இந்தவாரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. திருத்தணி,சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் வெயில் 110 டிகிரிரை நெருங்குகிறது
இந்த நிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
tamilnadu 12 district rain alert