தமிழக சட்டசபைக் கூட்டம்... இனி இப்போதுதான் தொடங்கும்! குழுவில் மாற்றப்பட்ட விதிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைந்தது. 

மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை கூட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றதை ஒட்டி கூட்டத்தொகை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்கு தமிழக சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கான அறிவிப்பு சட்ட சபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தார். 

சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாக இனிவரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சட்டசபை 9.30 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu assembly session begin time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->