தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
Tamilnadu Auto New Charge announce soon
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலர், ஆணையர், மண்டல அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்டோ மீட்டர் கட்டண மாற்றம், பைக் டாக்ஸி தொடர்பான பிரச்சினைகள், ஆட்டோ டாக்ஸி செயலி போன்ற பல விவகாரங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
இன்னும் ஒரு சில தினங்களில் தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
English Summary
Tamilnadu Auto New Charge announce soon