கோவை பல்கலை வளாகத்தில் சிறுத்தை!!! வனத்துறையினரிடம் பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!!!
Leopard in Coimbatore University campus People are relieved as it was caught by the forest department
கோவை மாவட்டம் வடவள்ளியடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சில காலமாக இருந்து வந்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் 4 ஆடுகளைக் கொன்று தின்னு விவசாயி ஒருவருக்கு மன வேதனைக் கொடுத்தது. இந்தச் சிறுத்தை அட்டகாசம் செய்து வந்தது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மனவேதனை அளித்தது.

சிறுத்தை:
இந்நிலையில், பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று தென்பட்டதாகத் தகவல் வெளியானது.இது அங்குள்ள பல்கலை மாணவர்கள் மத்தியில் பயத்தைக் கிளப்பியது. அச்சுறுத்தும் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கும் படி வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 11) ஆடுகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் வலையில் சிக்கியது.மேலும் பூச்சியூர் பழைய கட்டடத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையைப் பிடிக்க முயன்ற போது, சிறுத்தைத் தாக்கியதில் 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர்.ஆனால் வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் வலையில் சிறுத்தையைப் பிடித்து கொண்டு சென்றனர். அதற்குப்பின்னர் அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர். மேலும் அப்பகுதி ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நன்றியை வனத்துறையினருக்குத் தெரிவித்தனர்.
English Summary
Leopard in Coimbatore University campus People are relieved as it was caught by the forest department