மாவட்ட தலைவர்களின் 2-ஆம் கட்ட பட்டியல் - தமிழக பாஜக வெளியீடு.!
tamilnadu bjp announce district leaders second list
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், கரூர் மாவட்ட தலைவராக செந்தில்நாதன், சேலம் தெற்கு மாவட்ட தலைவராக ஹரி ராமன், தருமபுரி மாவட்ட தலைவராக சரவணன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக கேசிஎம்பி சீனிவாசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக ஜெயராமன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவராக கவிதா, ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக நெமிலி ஆனந்தன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவராக நாராயணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக எஸ்எம் செந்தில் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
tamilnadu bjp announce district leaders second list