ராமருக்கும் தமிழகத்திற்கும் என்ன பந்தம்? - அதிரவைத்த அண்ணாமலையின் பதில்.!
tamilnadu bjp leader annamalai pressmeet in thirubuvanam
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை இறுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, தொடர் மழை காரணமாக நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-
"குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகுவதற்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். இப்போது, 3-வது முறையாக மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி. அனைத்து கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். தனது வருங்கால சந்ததியினர் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர். மக்களின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்.
ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர். ஆனால், ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ராமர் வழிபட்டுள்ளார்" என்று அண்ணாமலை பேசினார்.
English Summary
tamilnadu bjp leader annamalai pressmeet in thirubuvanam