நாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்.!
Tamilnadu Budget
தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவை கூடிய உடன், 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
புத்தகங்கள் இல்லாமல் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
நாளைய கூட்டம் முடிந்த உடன் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.