அர்ஜுனா விருதை கையில் ஏந்திய தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் வீராங்கனை ஆா்.வைஷாலி!
Tamilnadu chess player Vaishali got Arjuna Award
கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற வீரர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் அறிவித்து வருகிறது.
அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது அண்மையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
பாட்மின்டன் வீரா்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு விளையாட்டுத் துறையில் மிக உயரியதான ‘மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
கிரிக்கெட் வீரா் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு சிறந்த போட்டியாளா்களுக்கான ‘அா்ஜுனா விருது’ வழங்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆா்.வைஷாலியின் சகோதரரும், செஸ் கிராண்ட் மாஸ்டருமான ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தை சேர்ந்த துரோணாச்சாரியா் விருது ஆா்.பி.ரமேஷ் (செஸ்), கணேஷ் பிரபாகா் (மல்லா்கம்பம்), துரோணாச்சாரியா் வாழ்நாள் சாதனையாளா் விருது பாஸ்கரன் (கபடி), தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருது கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கும் விடுதிகள் இன்று வழங்கப்பட்டது.
English Summary
Tamilnadu chess player Vaishali got Arjuna Award