#Breaking :: தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். முதல் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில் மருத்துவமனை சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு ஸ்டாலின் வந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் தற்பொழுது வீடு திரும்பி உள்ளார். மேலும் நாளை முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என தெரிய வருகிறது. முதல்வர் ஸ்டாலின் போரூர் ராமச்சந்திர மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu cm stalin admitted in hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->