தமிழக மீனவர்கள் 37 பேர் கைது! மீண்டும் மீண்டும் அராஜகம் செய்யும் இலங்கை கடற்படை! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் மூன்று விசைப்பாடுகளுடன், 37 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

கடந்த ஒரு வருடமாக இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை குறிவைத்து கைது செய்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

தமிழக முதலமைச்சரும் மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் கடிதம் எழுதிய வண்ணம் இருந்து வருகிறார்.

மேலும் கடந்த ஒரு மாதமாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் கோடிக்கணக்கில் அபராதம் விதித்து இருந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இது அனைத்திற்கும் மேலாக அண்மையில் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மொட்டை அடித்து, அவமதித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்த கொடுமை செயலும் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu fishermans again arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->