கனமழை எதிரொலி - மாவட்டம் வாரியாக உதவி எண்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913 (150 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044-25619204, 2561 9206, 25619207 ஆகிய எண்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மழை தொடர்பான புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக உதவி எங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:-

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107

வாட்ஸ்அப் : 8056221077

செங்கல்பட்டு மாவட்டம்:

பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077

மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.

வாட்ஸ்அப் : 9944272345

நாகப்பட்டினம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077

கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233

விழுப்புரம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265

தஞ்சாவூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213

வாட்ஸ்அப் : 93450 88997

அரியலூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709

வாட்ஸ்அப் : 9384056231

திருவள்ளூர் மாவட்டம்

கட்டுப்பாட்டு அறை எண் : 044-27664177, 044-27666746

வாட்ஸ்அப் : 9444317862

தாம்பரம் மாநகராட்சி :

உதவி எண்கள் : 18004254355, 18004251600

வாட்ஸ்அப் : 8438353355

கன்னியாகுமரி மாவட்டம்:

உதவி எண்கள் : 1077 , 04652 231077

வாட்ஸ்அப் : 9384056205 இந்த எண்களைத் தொடர்புக் கொண்டு மக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government announce helpline number for rain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->