தமிழக ஆளுநர் மாற்றமா? அடுத்த ஆளுநர் யார்? - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டின் ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணிபுரிந்து வருகிறார். ஆனால், இவர் சமீபகாலமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என்று ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu governor change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->