அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு.!
tamilnadu governor rn ravi visit anna university
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
அவர் மட்டும்தான் குற்றவாளி என்று போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
English Summary
tamilnadu governor rn ravi visit anna university