வசமாக சிக்கிய 14 பேர்! அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிரடி திருப்பம்! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இன்று இரண்டாவது நாள் விசாரணையின்போது, வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

அதில், IPC-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FIR வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான FIR தானாகவே Lock ஆகிவிடும். ஆனால் சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர் ஓ.டி.பி.யை பயன்படுத்தி FIR-ஐ பார்த்துள்ளனர். அந்த 14 பேரின் விவரங்களும் உள்ளன. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விளக்கம் கேட்கப்பட்டுள்ளது காவல்துறை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், போலீசார் முதல் தகவல் அறிக்கையை கசியச் செய்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறை கசியவிடவில்லை.

தொழில்நுட்பக் கோளாறுக்கு NIC-தான் பொறுப்பு. இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை. தொடர் விசாரணையில்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். குற்றவாளி வேறு எதாவது மொபைல் வைத்திருந்தாரா என்பது குறித்ததும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று வாதிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AU Case Chennai HC TNGovt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->