நொடிப்பொழுதில் பட்டா, சிட்டா பதிவிறக்கம் செய்யணுமா? தமிழக அரசு அசத்தல் திட்டம்.! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் இதுதொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில ஆண்டுகளில், பலவகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது;-

1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல்,

நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt info patta and chitta download online


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->