ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் பயணசீட்டு கிடையாது - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் பயணசீட்டு கிடையாது - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

அரசு பேருந்தில் இனி ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் இதுவரைக்கும் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இந்த வயது வரம்பை ஐந்து வயதாக உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இனிமேல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயணசீட்டு கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ளவர்களுக்கு அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசிதழில் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt order to No ticket for children up to five years of age in govt bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->