ஆயுதபூஜை: 1,62,240 பேர் பயணம்! 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் பயணம் செய்து உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், வார இறுதி நாட்கள்  மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (10/10/2024) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,028 பேருந்துகளும் ஆக நேற்றய தினம்  மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 640 பயணிகள் பயணித்து, தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். 

வரி செலுத்தாமல் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 வெளி மாநில பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக பெங்களூர் சென்ற பேருந்துகள், வாகன சோதனையின் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்து இயக்கப்பட்ட 18 வெளி மாநில ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Govt Transport Department Special Operation TNSTC SETC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->