சுப்ரியா சாகு உள்ளிட்ட தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்! அதிரடியில் இறங்கிய அத்தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முக்கியமாக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், சுற்றுலாத்துறை செயலாளராக சந்திரமோகன், பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா, நீர்வளத் துறை செயலாளராக மணி வாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை செயலாளராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஜான் லூயிஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலம், நில சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பின் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராயம், அரசு பேருந்து பழுது, கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட், சைதாப்பேட்டை சிறுவன் மரணம் என ஆளும் கட்சி மீது தொடர்ந்து அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று சொல்லப்படும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாகவும், வரும் காலத்தில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu IAS Transfers TNGovt order


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->