சென்னை மக்களே உஷார்... அடுத்த 2 மணி நேரத்துக்கு! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu next 2 hours rain update
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu next 2 hours rain update