நல்ல செய்தி: தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு! நாள் குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
Tamilnadu Rain Alert Feb 2025
தமிழகத்தில் கடும் வெப்பநிலை தொடரும் நிலையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிப்ரவரி 24ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும். சில பகுதிகளில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றுச்சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை ஏற்படலாம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 24ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும்.
மேலும், பிப்ரவரி 24 முதல் 27 வரை தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Tamilnadu Rain Alert Feb 2025