தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்து 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain update 21012024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->