தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
Tamilnadu rain update 24022024
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று, நாளை தென்தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
English Summary
Tamilnadu rain update 24022024