தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்குகின்ற பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடில்லாமல் காலத்தே வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் காட்சிகள் விடுத்துள்ளன.

மேலும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களின் அளவும், தரமும் குறைவாக இருப்பதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் இருந்து கள்ளச்சந்தைக்கு பொருட்கள் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu RationShop Timing issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->