பரபரப்புக்கு மத்தியில் வெளிநாடு செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாட்டிலேயே தமிழ்நாடு தான் தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 7, 8 உள்ளிட்ட தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமீபத்தில் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார்.

அதாவது, இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த 10 நாட்கள் சுற்றுப்பயணத்தில், தமிழகத்துக்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu stalin going to spain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->