தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu today possible to rain
வங்கக்கடலில் வடகிழக்கு பருவ காலத்தை ஒட்டி பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அவர்களும் ஏற்படுவது வழக்கம். வழக்கமாக பிப்ரவரி முதல் பாதியில் பருவ மழை முடிந்து விடும் நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் சாதாரணமாவே ஏற்படுவது உண்டு.
அந்த வகையில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று தமிழகத்தில் கரையை கடந்தது. இந்த நிலையில் மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது.
மேலும் இது வடக்குத் திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சூழ்ச்சியால் இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu today possible to rain