சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
Tamilnadu Weather report Chennai Rain Alert
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாய் உருவாகும் சூழல் இருந்த நிலையில்,.தற்போது, காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 36 மணிநேரத்தில் அது உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் நவம்பர் 15 வரை கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகுதிநேர லேசான மழை பெய்யக்கூடும்; அதிகபட்ச வெப்பநிலை 31-32°C, குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C வரை இருக்கும்.
மீனவர்கள் தென்தமிழக கடலோரப்பகுதிகளில், குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ஏனெனில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
English Summary
Tamilnadu Weather report Chennai Rain Alert