அடுத்த 14 நாள் ரெடியா இருங்க... சம்பவம் தொடரும் - 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கொடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு மழை தொடரும் என்று, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் வானிலை அறிவிப்புகளை வெளியிட்டு வரும், பிரதீப் ஜான் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த 10 முதல் 14 நாட்கள் வரை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடரும். 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடரும் என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தல காவிரியில் 23 சென்டிமீட்டர் ஏற்கனவே மழை பதிவாகியுள்ளதாக பிரதி பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

குறிப்பு: பிரதீப் ஜான் கொடுக்கும் வானிலை முன்னெச்சரிக்கைகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. அதிகாரப்பூர வானிலை முன்னெச்சரிக்கை செய்திகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னெச்சரிக்கை செய்திகளை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை விடுத்துள்ள வானிலை முன்னெச்சரிக்கையில், வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பெற்றுள்ளதாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று, நாளை ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் புயல் உருவாகாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இது கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு உண்டான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weatherman Rain alert 19 july 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->